×
Saravana Stores

செவ்வாழையின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழைப் பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.

மாலைக் கண் நோய் முதல் மலட்டுத் தன்மை பிரச்னை வரை தீர்வு தரக்கூடியதுதான் செவ்வாழை. மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், எலும்புகள் வலுவடைய மற்றும் குடல் இயக்கம் என அனைத்து உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களில் கற்கள் வராமல் தடுக்க பெரிதும் உதவுகின்றது. ரத்த அளவை அதிகரிக்கவும், ஹீமோக்ளோபினை அதிகரிக்க தேவையான அயன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதில் உள்ளது.

ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 1 அல்லது 2 பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அளவையும், புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்ய பெரிதும் உதவுகின்றது.நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் சுமார் 1 மாதம் வரை தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டுவந்தால் அந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். செவ்வாழை பழத்தில் ஏராளமான நன்மைகளும், பல நோய் தீர்க்கும் மருத்துவ தன்மையும் உள்ளது.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம்

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

தொகுப்பு: ரிஷி

The post செவ்வாழையின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உன்னத உறவுகள்