×

புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதிதிருவிழா முன்னிட்டு கடந்த 8ம் தேதி கலசம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9ம் தேதி காலை முதல் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் 10ம் தேதி பக்காசுரன் சோறு வழங்குதல் மற்றும் சுவாமி வீதி விழா நிகழ்ச்சியும் 11ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. 12ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் மற்றும் அம்மன் வீதி உலாவும் நடந்தது.

இதையடுத்து அலகு பானை எடுத்தல் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், கோயில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தீ மிதி திருவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் டி.எம்.தமிழ்வாணன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் பி.கே.இ.கபிலன், கே.வி.சண்முகம், வழக்கறிஞர் இ.நாகராஜ், சி.இளையராஜா, டி.புத்தமணி, எஸ்.சரத்குமார், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜே.உமாமகேஸ்வரன், ராஜ்மோகன் புல்லரம்பாக்கம், பூண்டி, நெய்வேலி மற்றும் திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post புல்லரம்பாக்கம் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி விழா appeared first on Dinakaran.

Tags : Fire Pedal Ceremony ,Bullarambakkam Thravupathi Amman Temple ,Thiruvallur ,Kalasam ,Tiruvpati Amman Temple ,Ambedkar ,Pakhasuran Choru ,Bullarambakkam Thravupati ,Amman ,Temple ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்...