- படவயல்-வெள்ளேரி சாலை
- Pandalur
- படவயல் வெள்ளேரி சாலை
- பிடார்காட் காடு
- பந்தலூர், நீலகிரி மாவட்டம்
- சிறுத்தை
- படவயல்-வெள்ளேரி
- தின மலர்
பந்தலூர்: பந்தலூர் அருகே பாட்டவயல் வெள்ளேரி சாலையில் சிறுத்தை நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி. காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. சிறுத்தை, கரடி அகியவை வனப்பகுதியைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறித்தி வருகின்றது. இந்த வனவிலங்குகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பாட்டவயல் வெள்ளேரி சாலையில் நேற்று சிறுத்தை நடந்து சென்றது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் சிறுத்தை நடந்து சென்றதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாட்டவயல்-வெள்ளேரி வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் அதிகளவில் நடமாடி வருகிறது. மேலும், இந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும், வனவிலங்குகள் நடமாட்டத்தை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாட்டவயல்-வெள்ளேரி சாலையில் பகல் வேளையில் சிறுத்தை சென்ற வீடியோ வைரல்: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.