×

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மக்கள் போராட்டம்

 

 

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். ம்மருத்துவமனை ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மயானத்தின நடுவில் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இங்கு பணியில் போதுமான அளவில் டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை. இதனால் காய்ச்சல், வயிற்றுவலி ஆகிய நோயால் பாதிக்கப்பட்டோருக்கும், பிரசவத்திற்கும் மட்டுமே இங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.விபத்தில் காயமடைவோருக்கு இங்கு முதலுதவி சிகிச்சையளித்து, மதுரை, திண்டுக்கல், தேனி அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதனால் ஏற்படும் காலதாமதத்தால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தோர் இறக்க நேரிடுகிறது. எனவே இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி, உரிய அனுமதி பெற்று நேற்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் வத்தலக்குண்டு காவல்நிலைய இன்ஸ்பக்டர் சிலைமலை, எஸ்ஐ சேக் அப்துல்லா மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

The post அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Wattalakundu ,Wattalakundu Government Hospital ,Otu ,Dinakaran ,
× RELATED பெண் கேட்டு வீட்டுக்கு சென்ற சென்னை டிரைவர் கொலை: காதலியின் தந்தை கைது