×

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 நாளாக பட்டினி கிடந்த தொழிலாளர்கள் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

தண்டையார்பேட்டை: மேற்கு வங்கத்தை சேர்ந்த 11 பேர், கடந்த வாரம் பொன்னேரியில் விவசாய வேலை செய்வதற்காக வந்துள்ளனர். அங்கு 3 நாட்களில் வேலை முடிந்தது. வேறு எங்கும் வேலை கிடைக்காததால், மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக 2 நாட்களுக்கு முன், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்களில் சிலர், பணம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். சென்னையிலேயே தங்கி, ஏதாவது வேலை கிடைத்தால் செய்யலாம், என கூறியுள்ளனர்.

அதன்பேரில் அனைவரும் சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியிலேயே தங்கினர். இவர்களிடம் போதிய பணம் இல்லாததால், உணவு சாப்பிடாமல் இருந்துள்ளனர். இதில், 4 பேருக்கு நேற்று மயக்கம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 நாளாக பட்டினி கிடந்த தொழிலாளர்கள் மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : strike ,Central railway station ,Thandaiyarpet ,West Bengal ,Ponneri ,Central… ,Dinakaran ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு;...