×
Saravana Stores

துப்பட்டா அணிந்திருந்ததே உயிரிழப்புக்கு காரணம்.! ஆவின் பண்ணையில் பெண் உயிரிழந்தது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் பண்ணையில் பெண் உயிரிழந்தது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று (20.08 2024) இரவு பால் பாக்கெட்டுகள் உற்பத்தியின் போது பணியில் இருந்த உமா மகேஸ்வரி என்கிற பெண் ஒப்பந்த தொழிலாளரின் சுடிதார் துப்பட்டா இயந்திரத்தின் கன்வேயர் பெல்டில் மாட்டிக் கொண்டு இழுத்த போது தலைமுடியும் சேர்த்து சிக்கிக் கொண்டதால் அவரது தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் ஊழியரின் கவன குறைவே விபத்திற்கு காரணம். திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில் உயிரிழந்த பெண் ஊழியர்,நீளமான துப்பட்டா அணிந்திருந்ததால் தான் விபத்து நேர்ந்துள்ளது. இனி ஊழியர்கள் கோட் அணிவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க திருவள்ளூர் ஆட்சியரிடம் பேசியுள்ளோம்” என்றார்.

The post துப்பட்டா அணிந்திருந்ததே உயிரிழப்புக்கு காரணம்.! ஆவின் பண்ணையில் பெண் உயிரிழந்தது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Aa ,Chennai ,Aavin ,Tiruvallur district ,Kakalur, Tiruvallur district ,Minister Mano Thangaraj ,Aa's ,Dinakaran ,
× RELATED ஆவின் டிலைட் பால் உற்பத்தி...