- வளர்ச்சி கருத்தரங்கு
- பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி
- சிவகாசி
- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை
- பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி
- டாக்டர்
- அருன் குமார்
- விக்னேஷ்வரி
- BSR கல்வி குழு
- தொழில்நுட்ப வளர்ச்சி
- தின மலர்
சிவகாசி, ஆக.21: சிவகாசி பிஎஸ்ஆர் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் மாணவர்களுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம் மின்சார வாகனம் என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர் கல்விக்குழுமத்தின் இயக்குநர்கள் டாக்டர் அருண்குமார், விக்னேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி தொடக்கவுரையாற்றினார்.
துறைத்தலைவர் வளர்மதி வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் குருமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மின் வாகனங்களின் அடிப்படை தகவல்கள், முக்கியத்துவம், சுற்றுச்சூழல், பொருளாதார முன்னேற்றம், சார்ஜிங் வசதி, பேட்டரி வாழ்க்கை மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்கால வளர்ச்சி ஆகியவை பற்றி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமலட்சுமி, விமலா, ராமசாமி, தனம் ஆகியோர் செய்திருந்தனர்.
The post பிஎஸ்ஆர் என்ஜினீயரிங் கல்லூரியில் தொழில்நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கம் appeared first on Dinakaran.