×
Saravana Stores

புத்தக ஆர்வலர்களால் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு பரிசு

 

கரூர், ஆக. 20: கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:2024-25ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம் தோறும் புத்தக திருவிழாவினை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இவ்வாறு சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் அரசின் நோக்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதோடு வீடுதோறும் நூலகஙகள் அமைக்க முன்வருவார்கள் என்பதன் அடிப்படையில்,கரூர் மாவட்டத்தில் வீடுதோறும் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்த சிறந்த தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில் மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தினை தேர்ந்தெடுத்து, சொந்த நூலகங்களுக்கு விருது ரூ.3000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட கலெக்டரால் கரூர் புத்தக திருவிழாவின் போது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

எனவே, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தக ஆர்வலர்கள் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விபரத்துடன் ஆகஸ்ட் 31ம் தேதிககுள் மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பி த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

The post புத்தக ஆர்வலர்களால் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Karur ,Aga ,Karur District Central Library ,Minister of ,School Education ,Government of Tamil Nadu ,School Education Department ,Minister of School Education ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...