புதுடெல்லி: கொரோனா தொற்றை தொடர்ந்து உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. இதுகுறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா அவசர ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைத்துள்ளது. அதில் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் வங்காளதேசம், பாகிஸ்தான் எல்லையில் உள்ள துறைமுகங்களில் வரும் சர்வதேச பயணிகளிடம் குரங்கம்மை பாதிப்பு அறிகுறிக குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, சப்தர்ஜங், லேடி ஹார்டிங் ஆகிய மருத்துவமனைகள் நோடல் மருத்துவமனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் நோடல் மருத்துவமனையை தேர்வு செய்து, சுகாதார வசதிகளை தயார் செய்து வைக்குமாறுமம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
The post குரங்கம்மை பாதிப்பு ஏர்போர்ட்டுகளுக்கு ஒன்றிய அரசு அலர்ட் appeared first on Dinakaran.