×

பும்ராவுடன் மோதியது எனது தவறு தான்: சாம் கோன்ஸ்டஸ் வருத்தம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் இந்தியா 3-1 என தோல்வி அடைந்து டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்கு தகுதி பெறும்வாய்ப்பை இழந்தது. இந்த தொடரில் சிட்னியில் நடந்த கடைசி போட்டியின் போது, 19 வயது ஆஸி.யின் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டஸ் இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியின் முதல் நாளில் மாலை வேளையில் பேட்டிங் செய்த துவக்க வீரர் உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை தாமதம் செய்தார்.

அப்போது ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்ற வகையில் பும்ரா அவரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு தேவையின்றி எதிர்ப்புறம் இருந்த கோன்ஸ்டஸ் அவரிடம் சில வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார். அவருக்கு பும்ராவும் பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார். அடுத்த பந்தில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அப்படியே திரும்பி அவரை முறைத்து வெறித்தனமாக பதிலடி கொடுத்தார். இந்நிலையில் கவாஜா விக்கெட்டை இழக்க பும்ராவிடம் தேவையின்றி மோதிய தம்முடைய தவறு தான் கரணம் என்று சாம் கோன்ஸ்டஸ் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் தாங்கள் வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்க முயற்சித்ததாகவும் அவர் ஒப்பு கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், அந்த நேரத்தில் நான் மிகவும் குழப்பமடையவில்லை. துரதிஷ்டவசமாக அதன் பின் கவாஜா அவுட்டானார். அது என் தவறு. ஆனால் கிரிக்கெட்டில் அவ்வாறு நடப்பது சகஜம். அந்த விக்கெட்டை பெற்றதற்காக பும்ராவுக்கு பாராட்டுக்கள். அதே சமயம் அவர் அவர்களுடைய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறினார்.

The post பும்ராவுடன் மோதியது எனது தவறு தான்: சாம் கோன்ஸ்டஸ் வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Bumrah ,Sam ,Sydney ,India ,Border-Gavaskar Test Trophy ,Australia ,Test Championship ,Aussie… ,Dinakaran ,
× RELATED டீம் ஆப் தி இயர் 2024 கேப்டனாக பும்ரா...