×

மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு, ரக்சா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள்.

பதிலுக்கு சகோதரர்களும், தனது சகோதரி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உறுதியளித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அத்துடன் சகோதரிகளுக்கு பரிசு அல்லது பணம் கொடுத்து மகிழ்ச்சி அடைய வைக்கிறார்கள். வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த பண்டிகை, இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

இந்த நிலையில், ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டதாவது; சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்சா பந்தன் திருநாளை அன்புச் சகோதரிகளுடன் செவ்வந்தி இல்லத்தில் கொண்டாடி மகிழ்வுற்றேன். மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

 

The post மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்: எடப்பாடி பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : May ,Edappadi Palaniswami ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Raksha Bandhan ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...