×
Saravana Stores

திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கலெக்டர் ஆய்வு

 

* கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
* கோயிலில் பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு

திருவண்ணாமலை, ஆக.19: திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு, கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று அதிகாலை 2.28 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 1.02 மணிக்கு நிறைவடைகிறது. ஆனாலும், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கினர்.இந்நிலையில், பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது, கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் அமைத்து இருந்த கடைகளை அப்புறப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

The post திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pournami Krivalam ,Tiruvannamalai ,Kriwala Path ,Collector ,Bhaskara Pandian ,Avani month ,
× RELATED திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்