சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெயிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியத்தில் 2021ம் ஆண்டு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் சில தொழிலாளர்கள் தகுதித் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு 9,613 நபர்கள் கேங்மேன் தொழிலாளர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இப்படி தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களை அந்தந்த மாவட்டத்தில் நியமனம் செய்யாமல் 300 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள மாவட்டங்களில் பணி அமர்த்தினார்கள்.
இதனால் கேங்மேன் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து அவர்களுக்குரிய பணியை செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும் கேங்மேன் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அரசாணையையும் உடனே வெளியிட வேண்டும்.
The post மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை சொந்த மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க பிரேமலதா கோரிக்கை appeared first on Dinakaran.