- குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் சக்தி கோவில் ஆவணி திருவிழா
- கொள்ளிடம்
- சுயம்பு ஆதினாகதம்மன்சக்தி
- குமிளங்காடு
- மயிலாதுதுரை மாவட்டம்
- அவனி
- குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் சக்தி கோவில் ஆவணி திருவிழா
கொள்ளிடம், ஆக.18: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த சுயம்பு ஆதிநாகாத்தம்மன்சக்தி கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆவணி மாதம் பக்தர்கள் பால்குடம் கரகம் மற்றும் காவடி எடுத்து வந்து ஆலயத்திற்கு வருவது வழக்கம். இந்த வருடம் நடைபெறும் ஆவணி மாத விழாவை முன்னிட்டு முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர்,திரவியப் பொடி, மஞ்சள்,சந்தனம் ,இளநீர் ,பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு கையில் காப்பு கட்டி கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 25 ஆம் தேதி மாலை பக்தர்கள் அங்குள்ள கோட்டைஅய்யா கோயிலிலிருந்து கரகம்,காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து அம்மனுககு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ஜெய்குருதேவ் தெய்வேந்த அடிகளார், விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்து வருகின்றனர்.
The post கொள்ளிடம் அருகே குமிளங்காடு சுயம்பு ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயில் ஆவணி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.