×
Saravana Stores

பேரையூர் பகுதியில் பருவமழை எதிரொலியாக கால்வாய் சீரமைப்பு பணி: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்

 

பேரையூர், ஆக. 18: பேரையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே எதிர்வரும் பருவமழை காலத்தை முன்னிட்டு, இப்பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலையான சதுரகிரிமலையிலுள்ள எருதுகொம்பாறு, யானை கெஜம், வருசநாடு ஓடை உள்ளிட்ட பகுதியிலிருந்து நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் முத்து ஈஸ்வரன் தலைமையில், இளநிலைப் பொறியாளர் சுந்தரராஜன் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி பேரையூர் முதல் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, சாப்டூர், டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, எழுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள சாலையின் குறுக்கே செல்லும் பாலங்களின் அடிப்பகுதியில் உள்ள காலவாய்கள் சீரமைக்கப்படுகின்றன. இதன்படி அங்குள்ள முட்புதர்களை நீக்கியும், அடைப்புகளை அப்புறப்படுத்தியும், வாகனங்கள் விபத்தில் சிக்காதவாறு பாலங்களுக்கு வர்ணம் பூசுவதுடன், எச்சரிக்கை குறியீடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post பேரையூர் பகுதியில் பருவமழை எதிரொலியாக கால்வாய் சீரமைப்பு பணி: நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Erudu Kombaru ,Yanai Kejam ,Varusanadu Odai ,Western Ghats ,
× RELATED டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்