×

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை சாலையோர மரம் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு

 

கரூர், ஆக. 17: கரூரில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்த நிலையில், சாலையோரம் இருந்த மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கருர் மாவட்டம் முழுதும் கடந்த ஐந்து நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது, இதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதே போல், நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்தது.

இந்த பலத்த மழையின் எதிரொலி காரணமாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ஐஓபி வங்கி எதிரே இருந்த பெரிய மரம் ஒன்று சரிந்து சாலையின் மையத்தில் விழுந்தது. சாலையை முற்றிலும் மறைத்தவாறு மரம் விழுந்த காரணத்தினால் சாலையின் இருபுறமும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாந்தோணிமலை கரூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பொக்லைன் வரவழைக்கப்பட்டு மரத்தை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை சாலையோர மரம் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Karur, Aga ,Karur ,Dinakaran ,
× RELATED நில உரிமைதாரர்களுக்கு ஒருங்கிணைப்பு...