×
Saravana Stores

261 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில்

போளூர், ஆக. 17: போளூர் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 261 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை ஒன்றிய குழு தலைவர் பெ.சாந்திபெருமாள் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 261 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது. 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடியேற்று விழா நடந்தது. வட்டார வளர்ச்சிஅலுவலர் நீ.சக்திவேல் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.செ.லட்சுமி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அ.மணிகண்டன் வரவேற்றார்.

ஒன்றிய குழு தலைவர் பெ.சாந்திபெருமாள் தேசிய கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டம் துவங்கி உள்ளது. இதில் போளூர் ஒன்றியத்தை சேர்ந்த 261 பயானாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை ஒன்றிய குழு தலைவர் பெ.சாந்திபெருமாள் வழங்கினார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் ஆ.மிசியம்மாள்ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மு.மனோகரன், ெஜ.மணிகண்டன், சா.அய்யாசாமி, கி.சுகுணாகிருஷ்ணமூர்த்தி, சா.வீரமணி, சு.செல்வராஜ், பா.பாஸ்கரன், தே.மாலினிவினோத்திவாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 261 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை ஒன்றிய குழு தலைவர் வழங்கினார் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Union Committee ,Crystal ,President ,B. Shanthiperumal ,Polur Union ,Tiruvannamalai district ,Polur ,Dinakaran ,
× RELATED அகஸ்தீஸ்வரம் ஒன்றியக்குழுக் கூட்டம்