- Matur
- அமைச்சர்
- துரைமுருகன் காட்டம்
- வேலூர்
- காட்பாடி,
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தண்ணீர்
- Duraimurugan
- Edapadi
- வேலூர் மாவட்டத்தின் 71வது கூட்டுறவு வார விழா
- காட்பாடி
- துரைமுருகன் கதம்
வேலூர், நவ.16: தன்னுடைய காலத்தில் எல்லாவற்றையும் செய்ததாக சொல்லும் எடப்பாடி ஆட்சியில் ஒரே ஒரு ஏரிக்குத்தான் மேட்டூர் உபரி நீர் சென்றது என காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டத்தின் 71வது கூட்டுறவு வார விழா காட்பாடியில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 1,444 பயனாளிகளுக்கு ₹11.19 கோடி கடனுதவியும், 2023-24ம் ஆண்டில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களையும் வழங்கி பேசினார். இவ்விழாவில் எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த அமைச்சர் துரைமுருகனிடம், மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, ‘எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்துவதை பற்றி எனக்கொன்றும் இல்லை. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை ஒரே ஒரு ஏரிக்குத்தான் அனுப்பினார்கள். ஆனால், எல்லாவற்றையும் தன்னுடைய ஆட்சி காலத்தில் செய்ததாக கூறுகிறார். ஆனால் திமுக ஆட்சியில்தான் எல்லா ஏரிகளுக்கும் தண்ணீர் அனுப்பியது’ என்று தெரவித்தார்.
The post எடப்பாடி ஆட்சியில் ஒரே ஒரு ஏரிக்குத்தான் மேட்டூர் நீர் சென்றது அமைச்சர் துரைமுருகன் காட்டம் எல்லாவற்றையும் செய்ததாக சொல்லும் appeared first on Dinakaran.