×

அமிகோஸ் (தெலுங்கு)

என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி கல்யாண்ராம் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பக்கா ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமான ‘அமிகோஸ்’ தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கல்யாண் ராம் 3 வேடங்களில் நடித்திருந்ததுதான் ஸ்பெஷல்.

கல்யாணி நடராஜன், ஜெயபிரகாஷ் தம்பதியின் ஒரே செல்ல மகன் கல்யாண் ராம். சின்ன சின்னதாய் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் அவர் ஒரு நாள் இணையதளத்தில் ஜாலியாக ‘டப்ளிங்கர்ஸ்’ என்ற சைட்டுக்குள் செல்கிறார். அதாவது இந்த சைட்டில் நமது படத்தை பதிவிட்டால் நம்மைப் போன்ற தோற்றத்தில் யாராவது இருந்தால் அவர்களுடன் நம்மை இணைக்கும். விரும்பினால் அவர்களுடன் நட்பாக இருக்கலாம்.

அப்படித்தான் கல்யாண்ராம் தன் படத்தை பதிவிடுகிறார் அப்போது அவரை போன்ற தோற்றம் கொண்ட பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் ஹெக்டே, கோவாவை சேர்ந்த மைக்கேல் நண்பர்களாகிறார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் மைக்கேல் ‘பிபின் ராய்’ என்கிற மிகப்பெரிய சர்வதேச ஆயுத வியாபாரி. அவர் இந்த விளையாட்டையே வினையாக்கி இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்திவிட்டு வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். விளையாட்டாய் ஆரம்பித்த இந்த விஷயம், சீரியசாகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

கல்யாண்ராம் மூன்று வேடங்களிலுமே நல்ல வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வில்லன் பிபின்ராய் கேரக்டர் கச்சிதம்.கல்யாண்ராம் ஜோடியாக வரும் ஆஷிகா ரங்கநாத்துக்கு பெரிதாக வேலை இல்லை. பரம்ஜி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

ஜிப்ரானின் இசையும், சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவும் கச்சிதம். மூன்று கேரக்டர்களை கொண்டு இன்னும் திரைக்கதையில் விளையாடியிருக்கலாம் அதை தவற விட்டிருக்கிறார் இயக்குனர் ராஜேந்திர ரெட்டி. கிளைமாக்சில் ஏதோ பெரிய திருப்பம் இருக்கும், அல்லது சண்டை காட்சியாவது பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. என்றாலும் ஒரு முறை பார்க்கும் படமாக அமைந்திருக்கிறது.

The post அமிகோஸ் (தெலுங்கு) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : N.T.Rama Rao ,Nandamuri Kalyanram ,Netflix ,Kalyan Ram ,Kalyani Natarajan ,Jayaprakash… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘அன்னபூரணி’ பட சர்ச்சை இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார் நயன்தாரா