தண்டராம்பட்டு, ஆக. 14: மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த மனுதாரர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை செய்ய வேண்டும் என்று வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்து. தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் மோகன ராமன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தண்டராம்பட்டு தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மனுதாரர் ஒவ்வொரு வீட்டிற்கும் வருவாய்த்துறை ஊழியர்கள் சென்று அந்த மனு மீது விசாரணை செய்து தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சக்கரை, மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மனு அளித்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவு மக்களுடன் முதல்வர் திட்டத்தில் appeared first on Dinakaran.