- அமைச்சர்
- முத்தமிழ் முருகன்
- பழனி
- சேகர்பாபு
- சர்வதேச முத்தமில் முருகன் மாநாடு
- தண்டாயுதபாணி சுவாமி கோவில்
- பழனி, திண்டுக்கல் மாவட்டம்
- அறுபடை
- முத்தமிழ் முருகன் மாநாடு
பழநி: பழநியில் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடாக விளங்குகிறது. இங்குள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டில் ஆய்வரங்கங்கள், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக் கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பதுடன் கூடிய காட்சியரங்கம், கருத்தரங்கம், கலை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநாட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து முருக பக்தர்கள், ஆன்மிகச் சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில், 15 முருகனடியார்களின் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. 1300 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட உள்ளனர். இதில், 4 நீதியரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மிக சொற்பொழிவாளர்கள் கலந்து உள்ளனர். மாநாட்டில் விழா மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர் என இரண்டு மலர்கள் வெளியிடப்பட உள்ளன.மாநாடு காலை 8.30 மணி முதல் மதியம் 1 வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறுகிறது. மாநாட்டிற்காக பழநி நகரில் 8 இடங்களில் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 8 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் கலையரங்கம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
The post பழநியில் முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.