×
Saravana Stores

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி… ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு : பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பேட்டி

டெல்லி : இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், செபியின் தலைவா் மாதவி புரி புச் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் சனிக்கிழமை கட்டுரை வெளியிட்டது.இந்த விவகாரம் கடந்த இரண்டு நாள்களாக இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தரப்பில் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ், இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்தியாவை பொருளாதார ரீதியாக சீர்குலைக் முயற்சி செய்கின்றனர். செபி தலைவருக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டு திங்கள்கிழமை பங்குச்சந்தையை சீர்குலைக்க சதி நடைபெற்றுள்ளது. பங்குச்சந்தைகள் சரிவடைந்தால் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.செபி அனுப்பிய நோட்டீஸு க்கு ஹிண்டன்பர்க் இதுவரை பதிலளிக்களில்லை. காங்கிரசின் மோடி வெறுப்பு தற்போது இந்தியா வெறுப்பாக மாறியுள்ளது. ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு உள்ளது. பெகாசஸ் ஊழல் வழக்கின் போது உச்சநீதிமன்றம் ராகுலின் போனை கேட்டது, அவர் தரவில்லை. அந்த போனில் என்ன இருந்தது, எதை மறைக்கப் பார்த்தார் ராகுல் காந்தி?. மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததை காங்கிரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்த போதும் இது போன்ற அறிக்கை வெளியிடாதது ஏன்?”இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

The post இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி… ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு : பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Ravi Shankar ,Delhi ,Ravi Shankar Prasad ,Adani Group ,Madhavi Puri Buch ,SEBI ,Buka ,Dinakaran ,
× RELATED இந்திரா இருந்திருந்தால் பாஜ...