×

அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஓவிய கண்காட்சி: கவர்னர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார்

பெரம்பூர்: அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஓவிய கண்காட்சியை கவர்னர் ரவி திறந்துவைத்து பார்வையிட்டார். ஜெய்சுயா அறிவுசார் கல்வியகம் மற்றும் தென்னிந்தியா ஆய்வு மையம் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைந்த ‘’அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்’’ புகைப்பட கண்காட்சி என்ற தலைப்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்த புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்றுகாலை திறந்து வைத்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பும் அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் இடம் பெற்றிருந்தன. மேலும் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மட்டுமின்றி பலருக்கும் தெரியாத பல சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் தத்ரூபமாக இடம்பெற்றிருந்தது. அனைவரும் ஆர்வமுடன் கண்டுக்களித்தனர்.

 

The post அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த ஓவிய கண்காட்சி: கவர்னர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Unknown Freedom Fighters ,Governor RN Ravi ,Perambur ,Governor Ravi ,Jaysuya Intellectual Academy ,Center for South India Studies ,
× RELATED சென்னையில் நாளை நடக்கிறது;...