சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோழிக்குடிப்பட்டியில் தச்சங்குடி அய்யனார் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது. வயல்வெளியில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் முதலாவதாக கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. மாடுகளுக்கு கிராமத்தின் சார்பில் வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சிங்கம்புணரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்ததை அடுத்து வயில்களில் மழை நீர் தேங்கியது. இதனால் மாடுபிடி வீரர்களும் காளைகளும் தண்ணீரால் சிரமம் அடைந்தனர். மாடுகளை பிடிக்க முயன்றதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மஞ்சுவிரட்டை காண சரக்கு வாகனங்கள் மற்றும் வாடிவாசல் பகுதிகளில் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
The post ஆடிப்பெருக்கு விழாவில் மஞ்சுவிரட்டு appeared first on Dinakaran.