- ஆண்டியூர் ஆடிப்பெருந்தேர் திருவிழா
- அம்பானி
- அந்தியூர்
- ஆடிப்பெருந்திருவிழா
- அந்தியூர் குருநாதசாமி கோவில்
- ஆடிப்பெருந்தேர் திருவிழா
- குருநாதசாமி
- அந்தியூர்,
- ஈரோடு மாவட்டம்
- ஆண்டியூர் ஆடிப்பெருந்தேர் திருவிழா
அந்தியூர்: அந்தியூர் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா காலா குதிரையை ஒரு கோடி ரூபாய்க்கு அம்பானி தரப்பில் விலை பேசியதாக தெரிகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மாநில அளவில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா நேற்று 2வது நாளாக நடந்து வருகிறது. இத்திருவிழாவில் மாநில அளவிலான குதிரைச் சந்தை 4 நாட்களுக்கு நடக்கிறது. இதில் உயர்ரக குதிரைகளான மார்வார், கத்தியவார், நொக்ரா, இங்கிலீஷ் பிட் மற்றும் நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது. ரூ.25 ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை குதிரைகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காலா என்ற கத்திவார் ரகக் குதிரையினை கண்காட்சிக்கு கொண்டு வந்தார். காலா என்ற பெயர் கொண்ட இக்குதிரையை இந்தியளவில் பணக்காரரான அம்பானி தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு கேட்டதாகவும், செல்லமாக வளர்த்துவிட்டதால் அதனை விற்க மனமில்லை என்றும் தெரிவித்ததாக அதன் உரிமையாளர் கூறினார்.
மேலும் கருப்பு நிறமுடைய குதிரை அதன் உரிமையாளர் சொல்வதற்கு ஏற்ப சாகசம் செய்து இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் பல பரிசு கோப்பைகளை வென்றிருப்பதாக அதன் உரிமையாளர் வீரா வரதராஜன் கூறினார்.
இதேபோல் கால்நடை சந்தையில் மலை மாடுகள், குள்ளமான மாடுகள், முட்டு கிடாய்கள், முள்ளி வாய்க்கால் வளர்ப்பு வேட்டை நாய்கள் கண்காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் அறந்தாங்கியைச் சேர்ந்த பாபு என்பவர் கொண்டு வந்திருந்தார். இவைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து சென்றனர். அந்தியூர் குருநாதசாமி கோவில் முக்கிய விற்பனை பொருளாக பேரிக்காய்களும், மக்காச்சோள கருதுகளும் மலை போல் குவிக்கப்பட்டிருந்ததை திருவிழாவுக்கு வந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
The post அந்தியூர் ஆடிப்பெருந்தேர் திருவிழா;ரூ.1 கோடிக்கு அம்பானி கேட்ட கத்திவார் ரக குதிரை appeared first on Dinakaran.