சென்னை: கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒண்டிப்புதூர், எல்&டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலை. அருகிலுள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் சாத்தியக்கூறு பற்றி அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்திருந்தார்.
The post கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – டெண்டர் கோரியது அரசு appeared first on Dinakaran.