×

63 நாயன்மார்கள் விழா நாளை தொடக்கம்

ராசிபுரம், ஆக.9: ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள 63 நாயன்மார்களுக்கு, அறுபத்து மூவர் பெருவிழா என்ற பெயரில், கைலாசநாதர் சிவனடியார் திருகூட்ட அறக்கட்டளையினர், மூன்று நாட்கள் விழா நடத்துகின்றனர். முதல் நாள் விழா நாளை(10ம் ேததி) மாலை 5 மணிக்கு குறும்ப நாயனார் குருபூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 6 மணிக்கு குறும்ப நாயனார் குறித்து வேல்முருகன் பேசுகிறார். மாலை 7 மணிக்கு சிலம்பொலி நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை 7 மணிக்கு விநாயகர், முருகன், நந்திபெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஓதுவார் அய்யப்பன் திருமுறை பாடுகின்றனர். மாலை 6 மணிக்கு பரத நிருத்யாலயா சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி காலை 8 மணிக்கு, கோயிலில் இருந்து பன்னிரு திருமுறைகள், அடியார் பெருமக்களை கைலாய வாத்தியம் முழங்க, ஊர்வலமாக அரிமா சங்க மண்டபத்திற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை செய்து வருகிறது.

The post 63 நாயன்மார்கள் விழா நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 63 Nayanmar festival ,Rasipuram ,Kailasanathar Sivanadiyar Thirukoota Foundation ,63 Nayanmars ,Rasipuram Kailasanathar Temple ,Sixty-Three Festival ,63 Nayanmars festival ,
× RELATED ராசிபுரம் அருகே தெருநாய் கடித்து...