×

பள்ளிபாளையத்தில் சோதனை பான் மசாலா விற்ற கடைகளுக்கு அபராதம்

பள்ளிபாளையம், செப்.21: பள்ளிபாளையத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா கூல் லிப் பாக்கெட்டுகளை விற்பனை செய்த 2 கடைகளுக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிபாளையம் அருகே ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கநாதன், லோகநாதன் ஆகியோர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 2 கடைகளிலும் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 1.5 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள் தலா ₹25 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்தனர். மேலும், 2 கடைகளையும் சீல் வைக்க உத்தரவிடும்படி மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.

The post பள்ளிபாளையத்தில் சோதனை பான் மசாலா விற்ற கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Ayakatur ,Odapalli ,
× RELATED பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கிய நல்லாசிரியர்