×

1550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

நாமக்கல், செப்.20: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பக்தவத்சலம் நகரில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 31 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில், 1550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை பதுக்கிய, தொட்டிப்பட்டியை சேர்ந்த முருகன்(28) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 1550 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : NAMAKKAL ,CIGAR SUPPLY CRIME INVESTIGATION DEPARTMENT ,TRISHENGODU BHADAVATSALAM CITY ,NAMAKAL DISTRICT ,Dinakaran ,
× RELATED நாமக்கல் ரயில்வே கூட்ஷெட்டை 12 மணி நேரம் செயல்பட நடவடிக்கை