- சேலம்
- இன்ஸ்பெக்டர்
- சங்கீதா
- டிஎஸ்பி
- விஜயகுமார்
- சேலம் சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு
- ஓமலூர்
- சாமிநாயக்கன்பட்டி
- தின மலர்
சேலம்,ஆக.9: சேலம் சரக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஓமலூர், சாமிநாயக்கன்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாமிநாயக்கன்பட்டி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து ஆம்னி வேனுடன் 650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் சேலம் வலசையூர் அணைமேடு பகுதியை சேர்ந்த பெருமாள்(53) என்பது தெரியவந்தது. சாமிநாயக்கன்பட்டி, ஒமலூர் பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கால்நடை தீவனத்துக்கு அதிக விலைக்கு விற்க கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஆம்னி வேனில் கடத்திய 650கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.