- திருவேகாடு எஸ்.ஏ., பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரம் குறித்த கருத்தரங்கு
- திருவள்ளூர்
- திருவேகாடு, எஸ்.ஏ
- கல்லூரி
- கலை மற்றும் அறிவியல்
- டீன் பி.வெங்கடேஷ் ராஜா
- முதல் அமைச்சர்
- மாலதி
- அன்று திருவேகாடு SA கருத்தரங்கு
- சமத்துவம்,
- அதிகாரமளித்தல்
திருவள்ளூர்: திருவேற்காடு, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில் ‘மாற்றத்திற்கான வினையூக்கிகள் பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் எழுச்சி முன்னெடுப்பு’ என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் முதல்வர் மாலதி செல்வக்குமார் வரவேற்றார். இயக்குநர் வி.சாய் சத்யவதி முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் ஹவோர்த் இந்தியா பிரைவேட் லிமிட்டெடின் இந்தியச் செயல்பாட்டு இயக்குநர் தேவானந்த் நாராயணன் தலைமையுரை ஆற்றினார்.
தொழிலாளர்களில் பாலினப் பன்முகத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, பெண்களின் அதிகாரமளிப்பை நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைக்கும் விதத்தை எடுத்துரைத்தார். தலைமை பாத்திரங்களில் பெண்களுக்குச் சம வாய்ப்புகள் மற்றும் ஆதரவான திட்டங்களில் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். பர்மிங்காம் நகரப் பல்கலைக்கழகத்தின் பாலகிருஷ்ணன் முனியப்பன் தலைமைத்துவம் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு பற்றி விவாதித்தார். வில்னியஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐஸ்டெ விட்குனே – பஜோரினின் ஐரோப்பாவில் பாலின ஊதிய இடைவெளியைப் பற்றி உரையாற்றினார்.
மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஆதரவான கொள்கைகளை முன்மொழிந்தார். சீனாவின் சீனு பிரிட்டிஷ் கல்லூரியைச் சேர்ந்த ஜெயராஜ் போனாய் சிங்ககிராம், பொருளாதார மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் கொள்கைத் தலையீடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எத்தியோப்பியாவின் ஹவாசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்.கருணாகரன் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுகளின் பங்கை எடுத்துரைத்தார்.
The post திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் பாலின சமத்துவம், பெண்கள் எழுச்சி குறித்த கருத்தரங்கம் appeared first on Dinakaran.