×

புகையிலை விற்ற வாலிபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் ரயில் நிலையம் பெரியகுப்பம் அருகே சோதனை செய்தபோது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் ஹான்ஸ் 49 பாக்கெட், கூல் லிப் 37 பாக்கெட், விமல் 52 பாக்கெட், வி1 52 பாக்கெட், செல்போன் மற்றும் ரூ.8680 பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய இருந்ததும் தெரிய வந்தது. விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஓ.ஜி குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் சிவா (34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புகையிலை விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,TOBACCO ,THIRUVALLUR CITY POLICE STATION ,Thiruvallur Railway ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...