டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்; குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும். 2023 பிப்ரவரி முதல் தற்போது வரை 9ஆவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது. அமெரிக்க பொருளாதார சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.
உள்நாட்டுப் பொருளாதார செயல்பாடு தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2024-25க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆகவும், Q1 இல் 7.1% ஆகவும், Q2 இல் 7.2% ஆகவும், Q3 இல் 7.3% ஆகவும், Q4 இல் 7.2% ஆகவும் இருக்கும். 2025-26 ஆம் ஆண்டின் Q1 க்கான உண்மையான GDP வளர்ச்சி 7.2% ஆக இருக்கும்.
The post வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.