×
Saravana Stores

வங்கதேச பிரச்னையால் சென்னை ஏர்போர்ட்டில் 3 நாட்களாக தவித்த தம்பதி டாக்காவுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: வங்கதேச பிரச்னையால் சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களாக தவித்துவந்த வங்கதேச தம்பதி நேற்று மீண்டும் பத்திரமாக வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வங்கதேசத்தைச் சேர்ந்த சுசில் ரஞ்சன் என்பவரின் மனைவி புரோவா ராணி (61), தனது கணவருடன் புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தனது மனைவியுடன் சொந்த நாடான வங்கதேசத்திற்குச் செல்ல முடிவு செய்து கடந்த திங்கள்கிழமை சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணிக்க டிக்கெட்டு முன்பதிவு செய்திருந்தார். ஆனால் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக சென்னையில் இருந்து டாக்கா செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் தம்பதி இருவரும் ஊருக்குத் திரும்ப முடியாமல் விமான நிலையத்தின் வெளியே இரண்டு நாட்களாக காத்திருந்தனர்.

இதையறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக தொடர்பு கொண்டு, தம்பதிக்கு உரிய தங்கும் வசதி, உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தார். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் இயக்கப்படுகிறது என்ற தகவல் வெளியானதை அடுத்து பகல் 3 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இத் தம்பதியினர் டாக்கா புறப்பட்டு சென்றனர்.

The post வங்கதேச பிரச்னையால் சென்னை ஏர்போர்ட்டில் 3 நாட்களாக தவித்த தம்பதி டாக்காவுக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Bangladesh ,Dhaka ,CHENNAI ,Prova Rani ,Sushil Ranjan ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...