வங்கதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சத்குரு அவர்கள் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு, இதில் நம் பாரத நாடு விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
சத்குருவின் எக்ஸ் பதிவில் “இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு” எனப் பதிவிட்டு உள்ளார்.
ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்கமுடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அண்டை… https://t.co/d9ogGedtQs
— Sadhguru Tamil (@SadhguruTamil) August 7, 2024
அவரின் இந்தப் பதிவில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்வவங்கள் குறித்து அந்நாட்டில் வெளியாகும் ‘த டைலி ஸ்டார் (The Daily Star)’ என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியையும் பகிர்ந்து உள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் பகிர்ந்த மற்றொரு எக்ஸ் பதிவில் “நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்” எனப் பதிவிட்டு உள்ளார்.
நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதிசெய்வோம். -சத்குரு#Bangladesh https://t.co/wDwO3FvgJf
— Sadhguru Tamil (@SadhguruTamil) August 6, 2024
The post வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு: இந்தியா விரைந்து செயல்பட சத்குரு வலியுறுத்தல் appeared first on Dinakaran.