×

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கூடுதல் டிஜிபி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு கேடரில் கடந்த 1989ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பிரமோத் குமார் தேர்வானார். இவர் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி தற்போது கூடுதல் டிஜிபியாக உள்ளார். இவர் மீது சிபிஐ வழக்கு ஒன்று உள்ளது. இதனால் ஐபிஎஸ் அதிகாரியான பிரமோத் குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது புதுடெல்லியில் உள்ள ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் தன் மீது பதவிசெய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ஐபிஎஸ் அதிகாரியான பிரமோத்குமார் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதைதொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 7ம் தேதி கோவை சிபிஐ வழக்கில் உள்ள அனைத்து குற்றங்களிலும் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து கூடுதல் டிஜிபியான பிரமோத் குமார் தனது பதவி உயர்வுக்கான மனுதாக்கல் செய்து இருந்தார். அதன்படி நீதிமன்றம் அனைத்து குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதால் கூடுதல் டிஜிபியாக உள்ள பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

The post வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கூடுதல் டிஜிபி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : DGP ,Pramod Kumar ,Dheeraj Kumar ,Chennai ,Home Secretary ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெண் போலீசார் 2 பேருக்கு காவலர்கள்...