- வெள்ளலூர் காயல் வண்ணத்துப்பூச்சி பூங்கா
- கோயம்புத்தூர்
- வெள்ளலூர் குளம்
- Vellalur
- குளம்
- பட்டாம்பூச்சி
- பூங்கா
- தின மலர்
கோவை, ஆக. 7: கோவை வெள்ளலூர் பகுதியில் 90 ஏக்கர் பரப்பில் வெள்ளலூர் குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த 2018ல் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டது. இங்கு பல்வேறு மூலிகை செடிகள், பட்டாம்பூச்சிகளை கவரும் பல்வேறு செடிகள் நடப்பட்டன. இதனை தொடர்ந்து வெள்ளலூர் குளத்திற்கு பட்டாம் பூச்சிகள் வரத்து அதிகரித்தது. இங்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 300-க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளலூர் குளத்தில் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் பட்டாம் பூச்சி பூங்கா கோவை குளங்கள் அமைப்பு சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூங்கா பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம் பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பட்டாம் பூச்சி மற்றும் பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம் பூச்சி பூங்காவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நாளை திறந்துவைக்க உள்ளார். இதையடுத்து, பூங்காவில் திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
The post வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்கா நாளை திறப்பு appeared first on Dinakaran.