சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் கேரள முதல்வரிடம் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக, அதிமுக சார்பில் நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, நேற்று (6ம் தேதி) கேரள முதல்வர் பினராயி விஜயன், மின்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி ஆகியோரை அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கூடலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், கேரள மாநில அதிமுக செயலாளர் ஜி.சோபகுமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.நாசர் ஆகியோர் நேரில் சந்தித்து, அதிமுக சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினர். அதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
The post நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வரிடம் ரூ.1 கோடி நிவாரண நிதி: அதிமுக வழங்கியது appeared first on Dinakaran.