×
Saravana Stores

சிவகிரி அருகே குளம் தூர்வாரும் பணி

 

ஈரோடு, ஆக.6: சிவகிரி அருகே குளம் தூர்வாரி குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணியினை ஈரோடு எம்.பி. பிரகாஷ் தொடங்கி வைத்தார். சிவகிரி அடுத்துள்ள கவுண்டம்பாளையத்தில் 3.5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக வெட்டப்பட்ட இக்குளத்தினை கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தற்போதைய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் தூர்வாரும் பணியினை தொடங்கி வைத்து, குளம் தூர்வாரப்பட்டது.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப்பிறகு, அமைச்சர் உதயநிதி ஆலோசனையின் பேரில், இக்குளம் மாதிரி குளமாக தேர்வு செய்யப்பட்டு, மீண்டும் தூர்வாரி குளத்தை சுற்றிலும் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் குளத்தில் கலக்காத வகையிலும், குளத்தின் சுற்று கரைகளை அகலப்படுத்தி பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு, பொதுமக்கள் வாக்கிங் செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, குளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜையினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈ.ஐ.டி. நிறுவன பொது மேலாளர்கள் சஜித்தாயர், தங்கராஜ், பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணைத்தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post சிவகிரி அருகே குளம் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Erode ,Kulam Durwari Kulam ,Prakash ,Goundampalayam ,Dinakaran ,
× RELATED அரசு அலுவலக சுவர்களில் விளம்பர போஸ்டர்கள் அகற்றம்