புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதிகள் பெற்ற பரிசுகள் என்று 250 பரிசுகளை தேர்வு செய்து அவற்றை ஏலம் விடுவதற்கு ஜனாதிபதி மாளிகை முடிவு எடுத்துள்ளது. இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஷெல் கிராப்ட் ஓவியம் மற்றும் புத்தர் சிலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த பரிசு ெபாருட்களை https://upahaar.rashtrapatibhavan.gov.in/ என்ற பிரத்யேக போர்டல் வழியாக ஏலம் எடுக்கலாம். நேதாஜியின் ஓவியத்தின் அடிப்படை விலையாக ரூ. 4,02,500நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, அப்துல்கலாம் உள்ளிட்டோர் பெற்ற பரிசு பொருட்களும் ஏலத்தில் விற்கப்படுகிறது. ஆக.26ம் தேதி வரை ஏலம் எடுக்கலாம். அதிக விலைக்கு ஏலம் எடுத்தவர்களுக்குப் பொருள்கள் டெலிவரி செய்யப்படும். ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
The post ஜனாதிபதிக்கு பரிசாக வந்த நேதாஜியின் ஓவியம், புத்தர் சிலை உள்ளிட்ட 250 பொருட்கள் ஏலம் appeared first on Dinakaran.