×

வெப்தொடரில் நடிக்கிறார் அபிராமி

சென்னை: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தவர், அபிராமி. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் வெளிநாடு சென்ற அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், முதல்முறையாக அவர் வெப்தொடரில் நடித்துள்ளார். இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘ஒரு ேகாடை மர்டர் மிஸ்ட்ரி’ என்ற இத்தொடரை ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் இணைந்து தயாரித்துள்ளனர். திரைக்கு வந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கியிருந்த விஷால் வெங்கட் இயக்கியுள்ள இத்தொடருக்கு என்.பத்மகுமார், ரோஹித் நந்தகுமார் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், லிசி ஆண்டனி, ஜான், நம்ரதா, அபிதா, பிராங்க்ளின், சில்வன் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் என்.குமார் இசை அமைத்துள்ளார்.

இதில் நடித்தது குறித்து அபிராமி கூறுகையில், ‘இது நான் நடிக்கும் முதல் வெப்தொடர். இதில் என்னை நடிக்கும்படி கேட்கும்போதே முழு திரைக்கதையையும் கொடுத்தனர். எனக்கு மர்டர் மிஸ்ட்ரி என்றால் மிகவும் பிடிக்கும். திரைக்கதை மிகவும் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் பணியாற்றிய அனைவரும் மிகச்சிறந்த திறமைசாலிகள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும்போது, டைட்டில் கேரக்டரில் நடிப்பார்கள். இந்த வெப்தொடரில் நான் நடிக்க முக்கிய காரணம், திரைக்கதை. அது அவ்வளவு அற்புதமாக எழுதப்பட்டு இருந்தது. டீன்ஏஜ் உலகை தத்ரூபமாக எழுதியிருந்தனர். அதுபோல், நான் ஏற்றுள்ள அம்மா கதாபாத்திரம் மிக அழுத்தமாக அமைந்துள்ளது’ என்றார்.

The post வெப்தொடரில் நடிக்கிறார் அபிராமி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Abhirami ,CHENNAI ,Abirami ,Zee5 OTD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...