×

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை: நடிகர் விஜய் ஆண்டனி

சென்னை: மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2ம் தேதி ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் தனது ஒப்புதல் இல்லாமலேயே 2 நிமிட காட்சியை இணைத்துள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார்.

அத்திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்தின் சில காட்சிகளை சஸ்பென்ஸாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்தார். ஆனால் தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே 2 நிமிட காட்சியை இணைத்துள்ளதாகவும், இதனை யார் செய்தார்கள் என தெரியவில்லை எனவும் விஜய் மில்டன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சர்ச்சையான நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளதாவது; “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இனணத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை” என தெரிவித்துள்ளார்.

The post மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் 2 நிமிடக் காட்சியை நான் இணைக்கவில்லை: நடிகர் விஜய் ஆண்டனி appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Chennai ,Vijay Milton ,Megha Akash ,Sarathkumar ,Mashi Pattada ,
× RELATED விஜய் ஆண்டனி சகோதரி மகன் வில்லனாக அறிமுகம்