×
Saravana Stores

இன்று ஆடி பெருக்கு முன்னிட்டு; கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

அண்ணாநகர்: ஆடி பெருக்கு முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, நேற்று ஒரு கிலோ மல்லி 500 க்கும் ஜாதி மல்லி, முல்லை 400 க்கும் கனகாம்பரம் 800க்கும் அரளி பூ 250 க்கும் சாமந்தி 150க்கும் சம்பங்கி 200க்கும் பன்னீர் ரோஸ் மற்றும் சாக்லேட் ரோஸ் 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று ஆடி பெருக்கு மற்றும் நாளை அமாவாசை முன்னிட்டு மீண்டும் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 700 க்கும் ஐஸ் மல்லி 600 க்கும் முல்லை மற்றும் ஜாதி மல்லி 500 க்கும் கனகாம்பரம் 1000 க்கும் சாமந்தி 170க்கும் சம்பங்கி 220க்கும் அரளி பூ 200 க்கும் பன்னீர் ரோஸ் மற்றும் சாக்லேட் ரோஸ் 140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறியதாவது;
இன்று ஆடி பெருக்கு நாளை அமாவாசை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. பூக்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் அலைமோதுகிறது. இதனால் அனைத்து பூக்கள்களும் விறுவிறுப்பாக விற்பனையானதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விசேஷ நாட்கள், முகூர்த்த நாள் முடிந்த பிறகு மீண்டும் அனைத்து பூக்களின் விலை படிப்படியாக குறையும். இவ்வாறு தெரிவித்தார்.

The post இன்று ஆடி பெருக்கு முன்னிட்டு; கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Audi Peru ,Koyambedu ,Annanagar ,Koyambedu market ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்