×

நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்..!

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா (93) வயது மூப்பு காரணமாக காலமானார். மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாத்திமா இஸ்மாயில் மறைவை அடுத்து மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு நேரில் பல திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். பாத்திமா இஸ்மாயில் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு செம்பை முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இவர் செம்ப பாணபரத்தில் மறைந்த இஸ்மாயில் என்பவரின் மனைவி. நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு கேரள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்..! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mammootty ,Fatima Ismail ,Thiruvananthapuram ,Fatima ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...