×

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

நாகப்பட்டினம், ஆக.1: நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட நடப்பு கல்வி ஆண்டின் சேர்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் செல்போன் எண், ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக்கான கட்டணம் ஓர் ஆண்டு பிரிவு ரூ.235 மற்றும் இரண்டு ஆண்டு பிரிவு ரூ.245 செலுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 ஆகியவை வழங்கப்படும். மேலும் அரசு பள்ளியில் பயின்ற பெண் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேர்ந்து பயன்பெற வேண்டும். மேலும் தகவலுக்கு 04365-250129, 04365-250126 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Nagai District Govt Vocational Training Institutes ,Nagapattinam ,Collector ,Akash ,Nagapattinam District Government Vocational Training Centers ,District Collector ,Nagapattinam District Nagapattinam ,Tirukuwela ,Chempodai ,Nagai District Government Vocational Training Centers ,
× RELATED நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா