×
Saravana Stores

தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஆணையத்திற்கு பரிந்துரை

புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 100வது கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. இதில் டெல்லியில் இருந்தவாறு அதன் தலைவர் வினீத் குப்தா கலந்து கொண்டார்.அதேப்போன்று சென்னையில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகளும், கேரளா, கர்நாடகா, மற்றும் புதுவை மாநில அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர் ஆர்.தயாளுகுமார், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுமத்தைச் சார்ந்த அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா, காவிரியில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கான நீர் பங்கீட்டில் 45.95 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.

The post தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45.95 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஆணையத்திற்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Cauvery Commission ,Tamil Nadu ,New Delhi ,Cauvery Committee ,Vineeth Gupta ,Delhi ,Chennai ,Kerala ,Karnataka ,Puduwai ,
× RELATED மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு;...