×
Saravana Stores

போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம் – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில்: நாளை முதல் இயக்கப்படுகிறது

புதுடெல்லி: எர்ணாகுளம் – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்ட பதிவில், ‘கேரள மாநிலத்திற்கு மூன்றாவது வந்தே பாரத் ரயிலை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எர்ணாகுளம் – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூலை 31ம் தேதி (நாளை) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயிலை இயக்குவதன் மூலம் கேரளா – தமிழ்நாடு – கர்நாடகா இடையே இணைப்பு அதிகரிக்கும். இதனால் மாநிலங்களுக்கு இடையிலான பயண நேரம் மிச்சமாகும்’ என்று கூறியுள்ளார்.

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும். திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இந்த ரயில் இயக்கப்படும். பின்னர் இந்த ரயில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும். தற்போது, ​​கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு மற்றும் திருவனந்தபுரம்-மங்களூரு வழித்தடத்தில் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம் – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில்: நாளை முதல் இயக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Ernakulam ,Bangalore ,Bottanur ,Tiruppur ,Erode ,Salem ,New Delhi ,Kerala ,BJP ,K. ,Surendran ,New Vande Bharat ,
× RELATED பலாத்கார புகார்: நிவின் பாலி விடுவிப்பு