நன்றி குங்குமம் தோழி
டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட் போனுக்கு அடிமையாக மாறுவோர், பல ஆரோக்கிய பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நம் கட்டுப்பாடு எல்லைக்குள் வரையறுத்துக் கொள்வது மூலம் இந்த டிஜிட்டல் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர உதவும்.
* பயன்பாட்டை கண்காணிக்கவும்: என்ன தேவைக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறோம் என்பதை முதலில் கவனிக்கவும். அதிக நேரம் எந்த இணையத்தில் செலவிடுகிறோம் என்பதை அடையாளம் காண வேண்டும். அதன் பயன்பாட்டினை குறைக்க திட்டமிட வேண்டும்.
*இலக்குகளை அமைக்கவும்: ஸ்மார்ட் போன் பார்ப்பதை முதலில் 10% சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டுமென சிறிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். படிப்படியாக இலக்குகளை அதிகரிக்கலாம்.
* நோட்டிபிகேஷனை முடக்கவும்: போனில் வரும் நோட்டிபிகேஷன் நம் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய காரணம். அதனை முடக்கி முக்கியமானவற்றை மட்டும் பெறும்படி மாற்றி அமைக்கவும்.
*எல்லையை நிர்ணயிக்கவும்: ஸ்மார்ட்போன் பயன்பாடுக்கு குறிப்பிட்ட எல்லையை நிர்ணயிக்க வேண்டும். உணவு உண்ணும் நேரம், குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் நேரம், பொதுக் கூட்டங்களுக்கு செல்லும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்கூடாது என முடிவு எடுக்க வேண்டும்.
*வேறு விஷயங்களில் நாட்டம் செலுத்தவும்: எப்போதும் ஸ்மார்ட்போனும் கையுமாக சுற்றாமல், அதற்கு மாறாக புத்தகம் படித்தல், விளையாட்டில் ஈடுபடுதல் போன்ற பொழுதுப்போக்கு விஷயங்களை செய்யலாம்.
*துங்கும் முன் தவிர்க்கவும்: இரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்தில் ஸ்மார்ட் போனில் இருந்து வெளியாகும் நீல ஒளி, நம் கண் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும். உறங்க செல்லும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாக போன் பார்ப்பதை தவிர்க்கவும்.
*மனதை ஒருமுகப்படுத்தவும்: ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற மன அழுத்தம், கவலையை போக்க, தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவற்றை கடைபிடிக்கலாம்.
– சௌமியா சுப்ரமணியன், சென்னை.
The post ஸ்மார்ட் போன் அடிக்ஷனில் இருந்து விடுபட டிப்ஸ்! appeared first on Dinakaran.