×

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செய்யது இப்ராஹிம் திமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செய்யது இப்ராஹிம் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்புராஹிம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி செய்யது இப்ராஹிம் திமுகவில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram District ,Administrator ,Ibrahim Dimugh ,Chennai ,Ramanathapuram ,District Administrator ,Ibrahim Dimuq ,General Secretary ,Dhuraimurugan ,Dimuga ,Duraimurugan ,Dinakaran ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத...