×

வேலையின்மை 3 சதவீதமாக குறையும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை

புதுடெல்லி: வேலையின்மை விகிதமானது 3.2 சதவீதத்தில் இருந்து எதிர்காலத்தில் 3 சதவீதமாக குறையும் என்று ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தற்போதைய வேலையின்மை விகிதமானது 3.2சதவீதமாக உள்ளது. இது 2017-2018ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் காரணமாக 3.2சதவீதமாக குறைந்துள்ளது. இது எதிர்காலத்தில் 3 சதவீதமாக குறையும். எனவே வேலை இழப்புகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. வேலை பற்றாக்குறை இல்லை என்றார்.

The post வேலையின்மை 3 சதவீதமாக குறையும் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Mansukh Mandaviya ,New Delhi ,Union Minister for Labor and Welfare ,Lok Sabha ,Union Labor Minister ,
× RELATED மக்களவைத் தேர்தலில் பாஜக...